என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜாஸ் பட்லர்
நீங்கள் தேடியது "ஜாஸ் பட்லர்"
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், மார்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 112 ரன்களை சேர்த்தது.
சார்ஜா:
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மார்கன் 40 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் ஹசரங்கா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
அதிகபட்சமாக ஹசரங்கா 34 ரன்கள் எடுத்தார். ராஜபக்ச, ஷனகா ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.
இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி, அடில் ரஷீத், ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 24-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். #ENGvPAK
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இவர் இங்கிலாந்து அணிக்காக 18 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் சுமார் ஒன்றரை வருடங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வரும் 24-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோஸ் பட்லருக்கு இடம் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஜோ ரூட், 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஜானி பேர்ஸ்டோவ், 4. டாம் பஸ், 5. ஸ்டூ்வர்ட் பிராட், 6. ஜாஸ் பட்லர், 7. அலஸ்டைர் குக், 8. தாவித் மலன், 9. பென் ஸ்டோக்ஸ், 10. மார்க் ஸ்டோன்மேன், 11. கிறிஸ் வோக்ஸ், 12. கிறிஸ் வுட்.
27 வயதாகும் பட்லர் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடைசி 6 போட்டியில் ஐந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

×

X